கிணற்றில் தவித்த 15 நல்ல பாம்பு குட்டிகள் பத்திரமாக மீட்பு..!
ஒடிசாவில் தண்ணீர் நிறைந்த கிணற்றில் தவித்த 15 நல்ல பாம்பு குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பிரம்மா என்ற இடத்தில் கிணறு ஒன்றில் ஏராளமான குட்டிப் பாம்புகள் இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
ஒரு சிறிய கூடை மூலம் அந்த பாம்புகள் மீட்கப்பட்டன. இறுதியில் கூடைக்குள் இருந்தவை அனைத்தும் நல்ல பாம்பு குட்டிகள் என்பது தெரியவந்தது. இந்த பாம்புகள் வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.






