ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஜூலை 18 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர். தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





