சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்களை பட்டாக்கத்தியால் வெட்ட முயன்ற சிசிடிவி காட்சி..!
சென்னை திருவிக நகரில் சாலையோரம் நின்று கொண்டு இருந்தவர்களை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்ட முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு சாலையோரம் இருந்தவர்களை விரட்டியுள்ளனர். யாரும் கையில் கிடைக்காத நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி தப்பியுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரை கைது செய்தனர். போலீஸார் விசாரணையில் முன்விரோதம் காரணமாக கும்பலில் இருந்த ஒருவரை பயமுறுத்த முற்பட்டதாக தெரிவித்தனர்.





