ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தேசிய முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர் காமராஜர்..!
தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தேசிய முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
காமராஜரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி காமராஜர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு உள்ளிட்டவற்றில் காமராஜரின் பங்களிப்பு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தற்போது வரை உத்வேகம் அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.






