சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை..!
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் தமிழகத்தில் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் பகல் நேரத்தில் வறண்ட வானிலை நிலவும். மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ததால், அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழும்பூர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயில் காட்டுப்பாக்கம் செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.







