--- --:--:-- --

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசனை..!

1

மிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நாளை மறுதினம் ஆலோசனை நடத்த இருக்கிறார். புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் கொரொனா ஓரளவு கட்டுப்படுத்த பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

 

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டத்தில் ஆணையர் நந்தகுமார் இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளன.

 

மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளன.

Leave a Reply

Right Menu Icon