தனுஷ் நடித்து வரும் படத்திலிருந்து இயக்குனர் விலகவில்லை..!
தனுஷ் தற்போது நடித்து வரும் டி 43 படத்திலிருந்து இயக்குனர் விலகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய தனுஷ் தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. மேலும் தனுசே தற்போது இயக்கி வருவதாகவும் அவருக்கு உறுதுணையாக சுப்பிரமணிய சிவா இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்த போது தனுஷ் கார்த்திகேயன் இருவருக்குமே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை கார்த்திக் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.






