நடிகர் சல்மான் கான் மீது மோசடி புகார்..!
சல்மான் கான் அவரது சகோதரி ஆல்விராகன் மற்றும் பீயிங் கியூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான் மீது சண்டிகர் நகரை சேர்ந்த தொழிலதிபர் குப்தா என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சண்டிகரில் 2018இல் நகைக்கடை ஒன்றை தொடங்கியதாகவும் கடைக்கு தேவையான பொருட்களை அளிப்பதாக சல்மான்கான் தரப்பில் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சொன்னபடி செய்யாததால் கடை பூட்டப்பட்டு தனக்கு பொருளாதார இழப்பு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சல்மான் கான் அவரது சகோதரி ஆல்விராகன் ஆகியோரை ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.






