முகக் கவசம் அணியாமல் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர்..!
சத்தியமங்கலம் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் முகக் கவசம் அணியாமல் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உடல் வாகன ஓட்டி ஒருவர் வாக்குவாதம் செய்து அவரை முகக்கவசம் அணிய வைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரை முகக்கவசம் அணிய கோரி அந்த வழியாக சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கன்னடத்தில் பேசி வாக்குவாதம் செய்துள்ளார்.
முக கவசம் அணிய வில்லை என்றால் ஆவணங்களை காண்பிக்காதீர்கள் என்று மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி உஷாரான காவல் உதவி ஆய்வாளர் உடனே முகம் கவசத்தை அணிந்து கொள்கிறார்.






