இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை பகிர முடியாது..!
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர முடியாது எனவும் முழுமையான வீடியோ தளமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக் டாக் தடைக்குப் பிறகு ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் வீடியோ பிளாட்பார்மில் முத்திரை பதித்துள்ளது. இனி அதற்கான பணிகளை மேலும் அதிகரிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தலைவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பகிரக் கூடிய தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கு சார்ந்த முழுமையான வீடியோ தளமாக இன்ஸ்டாகிராம் இருக்க முடிவு செய்து இருப்பதாகவும் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் டெக்னாலஜி மூலம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து புதிய அப்டேட் வரத் துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.







