பொருட்களை அடகு வைத்து பிரியாணி சாப்பிட்ட மகனை கொலை செய்த தந்தை..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து பிரியாணி சாப்பிட்ட மகனை கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை போலீசில் சரணடைந்தார். கடலூரை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
குடிப்பழக்கத்தால் மனைவி தன்னை விட்டுப் பிரிந்தும் திருந்தாத பாஸ்கரன் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை அடகுவைத்து குடித்தும் பிரியாணி சாப்பிட்டும் ஆடம்பரமாக இருந்து வந்துள்ளார்.
நேற்றிரவு குடிக்க காசு கேட்டு பெற்ற தாய் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி தாக்கியதால் ஆத்திரமடைந்த தந்தை தக்ஷிணாமூர்த்தி மகன் பாஸ்கரனை கம்பியை வைத்து அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.







