--- --:--:-- --

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

10

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் நோய்த்தொற்று படிப்படியாக குறைவதால் ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

 

இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை சாலை மற்றும் பூங்காக்களில் இரவு 9 மணி வரை பொதுமக்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் யோகா மையங்களில் 50 விழுக்காடு வரை வாடிக்கையாளர்கள் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களோடு இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

 

தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை இயங்கும். அனைத்து மத வழிபாட்டு தளங்களை திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 பேருடன் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon