வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா..?
கமல் நடிக்கும் திரைப்படத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.
தேசிய விருது பெற்ற இவர் தற்போது விஜய் சேதுபதி சூரி நடிப்பில் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இதைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசலில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய்க்கும் கதை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் படங்களை முடித்த பிறகு கமல் படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் இறங்குவார் என கூறப்படுகிறது.






