--- --:--:-- --

மணமகளை தோளில் தூக்கிக் கொண்டு கரைக்கு திரும்பிய மணமகன்..!

8

பிஹாரில் கங்கையாற்றின் நீரில் சேற்றுப் பகுதியில் படகு சிக்கிக்கொண்டதால் மணமகளை தோளில் தூக்கிக் கொண்டு மணமகன் கரைக்கு திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அவகேடா பகுதியில் வசிக்கும் ஷிவ் குமார் சிங் என்பவர் மணமகன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருமண உடையுடன் படகு மூலம் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கங்கை ஆற்றில் படகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஆற்று மணலில் சிக்கிக் கொண்டது.

 

இதனையடுத்து படகிலிருந்து இருக்கும் இறங்கி தண்ணீரில் நின்ற போது மணமகள் தயக்கத்துடன் இருப்பதைக் கண்டார். உடனடியாக சற்றும் தாமதிக்காமல் அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு தன் தோளில் போட்டபடி ஆற்றின் கரை நோக்கி நடந்தார். அவருடன் வந்திருந்த உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon