3 அடி நீள பாம்பை விழுங்கிய 4 அடி நீள பாம்பு..!
ஒடிஷாவில் 3 அடி நீள பாம்பை 4 அடி நீள பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. குருடா மாவட்டத்தில் பாலக்காட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இரண்டு பாம்புகளும் கோப்ரா எனப்படும் நாகப்பாம்பு வகையைச் சேர்ந்தவை.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாம்பு உதவி குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சிறிய மூன்று அடி நீள பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.






