கத்தியால் குத்தி கொள்ளுங்கள்…தடுப்பூசி வேண்டாம் என பதறும் மக்கள்..!
திருநெல்வேலி அருகே தடுப்பூசி வேண்டாம் எனக் கூறி ஒட்டுமொத்த ஊரும் எதிர்ப்பு தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றனர்.
அப்போது அங்கிருந்த மக்கள் போதிய விழிப்புணர்வின்றி தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இளைஞர் சிலரும் கத்தியால் வேண்டுமானால் குத்தி கொள்ளுங்கள் ஊசி மட்டும் வேண்டாம் என்று கெஞ்சினர்.
நீண்ட நேரம் எடுத்துரைத்த போதும் ஒத்துழைப்பு கொடுக்காததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.






