--- --:--:-- --

6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!

13

வெப்பச்சலனம் மற்றும் கனமழையால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையைப் பொருத்தவரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon