--- --:--:-- --

சீதை வேடத்தில் கரீனா கபூருக்கு பதிலாக கங்கனா ரனாவத்..!

8

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆதி புருஷ் என்ற பெயரில் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கரீனா கபூருக்கு பதிலாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனா கபூரை அணுகிய தாகவும் அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட தாகவும் கூறப்பட்டது. கரீனாகபூர் சீதை வேடத்தில் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின.

 

இந்த நிலையில் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதும் விஜயேந்திர பிரசாத் கங்கனா ரனாவத் சீதை வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon