மீண்டும் இணையும் செல்வராகவன்-தனுஷ் கூட்டணி..!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு.
இந்த நிலையில் சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கலைபுலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.







