நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும்..!
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஒன்றிய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது.
இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இதில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் பரவல் குறைந்தால் நீட் தேர்வு நடத்தப்படும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.






