--- --:--:-- --

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா..!

12

நடிகர் விஜய்யின் 47 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவரது வீட்டின் முன் ஏராளமானோர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர்கள் இல்லத்தை நோக்கி அதிகாலை முதலே ரசிகர்கள் வரத் துவங்கினார்.

 

வீட்டு வாசல் முன் கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். பிறந்த நாளன்று நடிகர் விஜய்யை பார்த்து விட்டு செல்ல வேண்டும் என சென்னை மட்டுமல்லாமல் வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்துள்ளனர்.

 

பல மணி நேரமாக காத்திருந்தவர்கள் ஒரு கட்டத்தில் விஜய்யை பார்க்க வேண்டும் எனக்கோரி வாசல் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். விஜய் பண்ணை வீட்டில் இருப்பதாக கூறி அனைவரையும் கலைந்து செல்லுமாறு காவலர்கள் அறிவுறுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon