--- --:--:-- --

நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு எதிர்ப்பு..!

11

டிகர் விஜய்யின் புது பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.

 

ஆனால் தமது தாய் மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களை ஆதரிப்பதன் மர்மம் என்னவோ.. மாஸ்டர், பிகில் படங்களைத் தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய் மொழியைப் புறக்கணித்து அவமானப் படுத்துவது சரியா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon