துபாயிலிருந்த குழந்தை தந்தையிடம் கொண்டு சேர்க்கப்பட்டது..!
கொரொனாவால் தாயை இழந்த குழந்தையை திமுக பிரமுகர் உதவியுடன் திருச்சியிலுள்ள தந்தையுடன் சேர்த்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரேவதி என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக கணவர் மற்றும் ஒரு குழந்தையை விட்டுவிட்டு தன் மற்றொரு கைக்குழந்தையான டேவிட் உடன் துபாய்க்குச் சென்று அங்கு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு ரேவதி உயிரிழந்த நிலையில் கைக்குழந்தையை பார்க்க முடியாமல் தந்தை தவித்துள்ளனர்.
இதை அறிந்து துபாய் சென்ற திமுக நகர அமைப்பாளர் முன்னெடுப்பில் அங்கிருந்து வந்த பயணி ஒருவர் மூலம் குழந்தை விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தன் குழந்தையை கண்ட தந்தை வாரி அணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






