நான் மீண்டும் பிறந்து குழந்தையாக வருவேன் எனக்கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..!
குடும்பத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.
தமிழ்ச்செல்வன் என்பவரிடம் அவரது மனைவி பிரியா தனிக்குடித்தனம் வருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்த தமிழ்செல்வன் உருக்கமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த வீடியோவில் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் நான் மீண்டும் குழந்தையாக பிறந்து வருவேன் என கூறியுள்ளார். நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






