சிவசங்கர் பாபா அரசு மருத்துவமனையில் அனுமதி..!
கடவுள் எனக் கூறிக்கொண்டு தான் நடத்திவந்த சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
சிவசங்கர் பாபாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபாவுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே அமைந்துள்ள இன்டர்நேஷனல் பள்ளியில் சிபிசிஐடி போலீசார் சுமார் ஒரு மணி நேரமாக ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
சிபிசிஐடி அதிகாரி விஜயகுமார் தலைமையில் 2 ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு சுமார் ஒரு மணிநேரம் நடத்திய ஆய்வில் லேப்-டாப், கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.






