தாய்மாமனுடன் திருமண ஏற்பாடு ..! 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
மதுரை பாண்டி கோவில் அருகே தாய்மாமனுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாண்டி கோவில் அருகே தனியார் பள்ளியில் பயின்று வரும் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கொரொனா காரணமாக வீட்டில் ஆன்லைன் மூலமாக படித்து வந்தார்.
கடந்த மாதம் அந்த மாணவியின் விருப்பமின்றி தாய்மாமனை திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் முடிவெடுத்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர்.
மாணவி தனக்கு விருப்பம் இன்றி திருமண முயற்சிகள் நடைபெறுவதாகவும் தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காவல்துறை வாட்ஸ் அப்பிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் இதனையடுத்து காவல்துறையினர் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






