--- --:--:-- --

பவானி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

6

னமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் நீலகிரி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

 

இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நீர்மட்டம் 90 அடியை கடந்தது தற்போது அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இதனால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் இறங்கி குளிக்க போய் மீன் பிடிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon