--- --:--:-- --

மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இன்று காலை டெல்லி பயணம்.!

1

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் 7 பேர் விடுதலை தொடர்பாக அவர் பிரதமர் மோடியுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் முக ஸ்டாலின் தலைநகர் டெல்லிக்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார். அவருடன் திமுகவை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் சிலரும் சொல்கின்றனர்.

 

டெல்லியில் உள்ள இல்லத்தில் முக ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் செய்துள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை 5 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முகஸ்டாலின் பிரதமரிடம் அளிக்கிறார். மத்திய அரசு தொடர்புடைய நீட்தேர்வு விவகாரங்கள், ஹைட்ரோகார்பன் பிரச்சனை, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமரிடம் மு க ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

செங்கல்பட்டில் கொரொனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என தெரிகிறது. பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி தொகையை உடனடியாக விடுவிக்கும்படி கேட்டுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். பின்னர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சந்திக்கும் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் ரயில் திட்டங்கள் பற்றி பேசுவார்.

Leave a Reply

Right Menu Icon