பாலியல் குற்றவாளிக்கு ஆதரிப்பதா..? நடிகை பார்வதிக்கு எதிர்ப்பு
பாலியல் குற்றவாளிக்கு ஆதரிப்பதா என்று நடிகை பார்வதிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கேரள பாப் பாடகர் மீது சில பெண்கள் பாலியல் புகார் கொடுத்தனர்.
முதலில் இதனை மறுத்ததுடன் பின்னர் தவறை ஒப்புக்கொண்டு அந்த பெண்களிடம் மன்னிப்புக் கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவிட்டார் . ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டனங்கள் எழுந்தன.
இந்த பதிவை நடிகை பார்வதி முதலில் லைக் செய்துவிட்டார். குற்றவாளியை ஆதரிப்பதா என்று எதிர்ப்பு கிளம்பியதால் லைக்கை நீக்கிவிட்டார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் இவர் மீது குற்றம் சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.







