டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்ற இளம்பெண்..! வைரலாகும் வீடியோ..!
டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்ற இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரொனா பரவல் குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
கடந்த திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின. டாஸ்மாக் கடைகளில் கூட்டமாக நின்று மது வாங்கிக் கொண்டிருக்க அவர்களுடன் இளம்பெண் ஒருவர் மதுபான நின்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. மதுபான கடைக்கு முன் நிற்கும் அந்தப் பெண் அண்ணன் எனக்கு ஒரு பீர் வேண்டும் எனக் கூறுகிறார்.
அவர் பாட்டிலை எடுத்துச் செல்வதற்கு பையை கொண்டு வந்து இருக்கிறாயா இல்லையா என கேட்டதற்கு நான் கைகையிலேயே கொண்டுபோய் விடுவேன் என அந்த பெண் பதில் கூறியுள்ளார்.







