கீழடியில் நடைபெறும் அகழாய்வின் போது மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7 ஆம் கட்ட அகழாய்வின் போது பண்டைய கால மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இந்த மாதம் எட்டாம் தேதியில் இருந்து கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீழடி மற்றும் மணலியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு வரும்போது ஒரு குழியில் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த எலும்புக்கூட்டை முழுமையாக தோண்டி எடுத்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.







