--- --:--:-- --

பப்ஜி மதனின் மனைவி மற்றும் தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை..!

1

பெண்களை ஆபாசமாக பேசிய யூடியூபர் பப்ஜி மதனை தீவிரமாக தேடி வரும் சைபர் கிரைம் காவல்துறையினர் அவரது மனைவி மற்றும் தந்தையை சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் இணையத்தளம் மூலம் பயன்படுத்தியது, விளையாட்டு மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் புகார்கள் எழுந்ததையடுத்து அதன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

 

தலைமறைவாக இருக்கும் மதனை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் அவர் மீது இதுவரை 159 புகார்கள் வந்துள்ளன என்பதையும் அதன் மீதான விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் காவல்துறையினர் சேலத்திலிருந்து மதனின் மனைவியையும் தந்தையும் சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

 

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் நவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் தொழில் நுட்ப உதவியுடன்  மதன் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon