--- --:--:-- --

துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்து அதே துப்பாக்கியால் தற்கொலை செய்த நபர்..!

8

ந்திர மாநிலம் கடப்பாவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்து அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடப்பா அருகே பார்த்தசாரதி ரெட்டி என்பவருக்கும் சிவா ரெட்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. மோதலின்போது இரண்டு பேரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

பின்னர் பார்த்தசாரதி தன்னிடம் இருந்த கத்தியால் சிவரெட்டியை தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த சிவ ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பார்த்தசாரதி ரெட்டி மீது சுட்டுள்ளார்.

 

இதில் பார்த்தசாரதி ரெட்டி அதே இடத்தில் உயிரிழந்த நிலையில் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon