வூகான் ஆய்கத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவியதா..? – சீன விஞ்ஞானி கூறியதென்ன..?
வூகான் ஆய்கத்தில் இருந்து கொரொனா வைரஸ் வெளியே பரவி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை அந்த ஆய்வகத்தில் கொரொனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த பெண் விஞ்ஞானி டாக்டர் சி சங்லி மறுத்துள்ளார்.
பல கொரோனா வைரஸ் உடலின் பாகங்களை ஒருங்கிணைத்து புதிய வகை வவ்வால் கொரோனா வைரஸ் உருவாக்கி இருப்பதாகவும் அதில் ஒன்று மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் 2017ஆம் ஆண்டில் டாக்டர் ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
எனவே கொரொனாவை வலிமைப்படுத்தும் ஆய்வுகளை அவர் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து எதுவும் கூறாமல் இருந்து வந்த டாக்டர் தனது மௌனம் கலைத்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் கொரொனா வைரஸ் வலிமைப்படுத்தும் ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் அது எப்படி பரவுகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டார்.







