--- --:--:-- --

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்..!

4

நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

2019ஆம் ஆண்டு திருமாவளவன் இந்துக் கோயில்களின் வடிவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுரம் திருமவளவன் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வழக்கை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon