--- --:--:-- --

கொரொனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு செவித்திறன் பாதிப்பு..!

2

கொரொனா பாதிப்புக்குள்ளான சில நோயாளிகளுக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து மீண்ட சிலர் காதுகளில் இரைச்சல் அல்லது விசில் போன்ற சத்தம் கேட்பதாக கூறி டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

டெல்லி அம்பேத்கர் மருத்துவமனைகளில் புள்ளிவிபரங்களின்படி கடந்த 2 மாதங்களில் காதுகேளாமை கோளாறினால் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

 

எனவே பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்கள் காதுகளில் வலி அல்லது வேறு பிரச்சினைகள் இருந்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon