2 குழந்தைகளோடு தாயும் கிணற்றில் விழுந்து தற்கொலை..!
சாத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணர்.
இவரது மனைவி செல்வி. ஐந்து வயதில் மகனும், 3 வயதில் மகளும் இருந்தனர். ஏழு மாதத்திற்கு முன்பாக குடும்ப பிரச்சினை காரணமாக சங்கரநாராயணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 26 வயதில் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளோடு மனவேதனையுடன் வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் மேட்டுப்பட்டியில் பொன் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இரண்டு குழந்தைகளோடு குதித்து செல்வி உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் சடலமாக கிடந்த செல்வி மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டனர்.
தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் தலைவர் இறந்து சில மாதங்களில் மனைவி குழந்தைகள் அனைவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






