ரயில் பயணத்தின் போது உயிரிழந்த மனைவி..! கையில் குழந்தையுடன் தவித்த கணவன்..!
கொரொனாவால் வேலை இழந்த வடமாநிலத்தை சேர்ந்த சர்தார் என்பவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் திருப்பூரிலிருந்து தங்களின் சொந்த ஊரான வெஸ்ட் பெங்கால் சென்று உள்ளார்.
ரயில் காட்பாடி அருகே சென்றபோது சர்தாரின் மனைவி வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே மருத்துவமனைக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் ரயில் அரக்கோணம் வந்து ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர்கள் அங்கு சென்றுள்ளனர். பின்னர் அவரை சோதனை செய்து அவர் இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காச நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் பயணத்தின் போது உயிரிழந்த நிலையில் கையில் குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்.






