--- --:--:-- --

தமிழகத்தில் கொரொனா ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்..!

4

தமிழகத்தில் கொரொனா ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் ஊரடங்கு காரணமாக கொரொனா பாதிப்பு குறைந்து உள்ளதாக கூறினார்.

 

கொரொனா பாதிப்பு விரைவில் குறைந்துவிடும் என்றும் நமக்கான வளமிகுந்த தமிழ் நாட்டை அமைப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஊரடங்கை ஒரு சிலர் மீறினாலும் அதன் முழு பயன் கிடைக்காமல் போய்விடும் என முதல்வர் கூறினார்.

 

தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் மருத்துவ கட்டமைப்புக்கு கடுமையான நெருக்கடி அளித்துள்ளதாகவும் அதிலிருந்து மீள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்று கடந்த மூன்று வார காலத்தில் ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon