பட்டாக் கத்தியை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது..!
தஞ்சையில் சாலை நடுவே பட்டாக் கத்தியை வைத்துக்கொண்டு கானா பாடல் பின்னணியில் உதார் விட்டு அதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பட்டா கத்தியுடன் புல்லட்டில் உட்கார்ந்திருப்பது, புல்லட்டில் இருந்து கத்தியை எடுப்பதும் வாயில் கத்தியை கவ்வியபடி வேட்டியை மடித்து கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விசாரணையில் இறங்கிய போலீசார் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், தங்கமுத்து, கபிலர், முகேஷ் குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.






