--- --:--:-- --

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்..!

2

முழு ஊரடங்கின் போது கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 31ம் தேதி காலை 6 மணி முதல் ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய எட்டு மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பணியாளர்கள் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

இவை தவிர்த்து உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற பின்னர் தள்ளு வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் பொருட்களை குடியிருப்பு பகுதிகளில் விற்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon