புதிய குடும்ப அட்டை பெற வரும் பொதுமக்களிடம் 500 ரூபாய் லஞ்சம்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை பெற வரும் பொதுமக்களிடம் 500 ரூபாய் லஞ்சமாக வாங்கிய தாலுக்கா வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக வரும் பொதுமக்களிடம் தாலுக்கா வழங்கல் அலுவலர் சரவணன் 500 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக சமூக ஆர்வலர் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தெரிய வந்தது.
சமூக ஆர்வலர் பாலபாரதி இதுகுறித்து விசாரிக்க தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது மாவட்ட அதிகாரிகளுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆகவே தங்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு பணம் வாங்குகிறேன் என்று எவ்வித பதட்டமும் இல்லாமல் அலுவலர் சரவணன் கூறியுள்ளார்.
வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் சமூக ஆர்வலர் பாலபாரதி பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.






