ஒரு கோடிக்கும் அதிக தடுப்பூசி டோஸ்கள் மாநிலத்தில் உள்ளது – மத்திய அரசு
மாநில அரசுகளிடம் இன்னும் ஒரு கோடிக்கும் அதிக தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 16 கோடியே 33 லட்சத்து க்கும் அதிகமான டோஸ்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவற்றில் சேதம் உட்பட 15 கோடியே 33 லட்சத்து க்கும் அதிக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளிடம் இன்னும் ஒரு கோடிக்கும் அதிக தடுப்பூசிகள் இருப்பதாகவும் அடுத்த மூன்று நாட்களுக்குள் 20 லட்சம் டோஸ்கள் மாநிலங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை இவ்வாறு கூறுகின்றது.






