விண்ணில் தனக்கென தனி பிரத்யேக ஆய்வு மையத்தை அமைத்து வரும் சீனா..!
விண்ணில் தனக்கென தனி பிரத்யேக ஆய்வு மையத்தை அமைத்து வரும் சீனா அதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை வெற்றிகரமாக செலுத்தியது. ஹைனான் மாகாணத்திலிருந்து லாங்க்மார்ச் என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 66 டன் எடை கொண்ட சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பியாங்கே என்ற அந்த அமைப்பு விண்வெளி ஆய்வு மையத்தின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையமாகவும் பணியாளர்களின் முக்கிய வாழ்க்கை இடமாகவும் செயல்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தில் அமைத்து வரும் சீனா அடுத்தாண்டு முதல் அங்கு ஆய்வை தொடங்க உள்ளது.






