திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!
சென்னையை அடுத்த மதுரவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயில் செல்வகணபதி நகரைச் சேர்ந்த பிரபாவதி என்ற பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்புநடைபெற்றது.
பெண்ணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்ததாகவும் ஆனால் அவர் முறையாக மாத்திரை சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரபாவதியின் தாயார் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரபாவதி திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியுள்ளதால் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.







