--- --:--:-- --

தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

6

மிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார் .பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

 

மேலும் தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் போதுமானதாக இருக்கும் என மத்திய அரசால் தவறாக கணிக்கப்பட்டுள்ளதாகவும், கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திற்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

எனவே தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆலையிலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon