--- --:--:-- --

குருத்வாராவில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தானம் செய்யப்படுகிறது..!

10

க்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் குருத்வாராவில் நோயாளிகளுக்கு ஆக்சிசன் தானம் செய்யப்படுகிறது. காசியாபாத்தில் இந்திரா புரத்தில் செயல்பட்டுவரும் குருத்வாராவில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

 

தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் இங்கு ஆக்ஸிஜன் லங்கர் எனப்படும் ஆக்சிஜன் தானம் தொடங்கப்பட்டுள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் இருப்பவர்கள் உதவி எண்ணை தொடர்பு கொண்டால் நோயாளியின் இருப்பிடத்திற்கு அனுப்பி அவர்களை அழைத்து வருகின்றனர் .

 

காரில் வைத்து அவர்களுக்கு ஆக்சிசன் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் படுக்கையில் இடம் கிடைக்கும் வரை இங்கு ஆக்சிஜன் பெற்றுக்கொள்ளலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon