துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பாதுகாவலர்..!
கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பாதுகாவலர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை பாதுகாவலர் அவர் வைத்திருந்த துப்பாக்கியால் அவரே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் அவர் மன அழுத்தம் காரணமா? வேறு ஏதேனும் காரணமா? என அவர் நண்பர்கள் வட்டாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. ர்இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






