பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு காரை பரிசாக அளித்த நடிகை சமந்தா..!
பெற்றோர் மறைவுக்கு பிறகு தனது ஏழு சகோதரிகளை காப்பாற்ற வந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா அவரின் வாழ்வாதாரத்திற்காக 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வாங்கி கொடுத்து பரிசளித்துள்ளார். நடிகைகளில் சமந்தா சற்று வித்தியாசமானவர். தன் மனிதாபிமான செயல்களுக்காக பெயர் போனவர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அடிப்படை மருத்துவ வசதி கிடைக்காத பெண்கள், குழந்தைகளுக்கு இந்த அமைப்பு வழியாக சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதைப்போல ஆதரவற்ற 28 குழந்தைகளையும் தன் அமைப்பு மூலம் சமந்தா வளர்த்து வருகிறார். இந்தாண்டு சமந்தா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹைதராபாத் அருகே உள்ள மியாபூரை சேர்ந்த கவிதா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவிதா பேசுகையில் தனக்கு ஏழு சகோதரிகள் என்றும் தான் கணவரால் கைவிடப்பட்டவர் என்றும் தன்னை பற்றி கவிதா குறிப்பிட்டார்.
மேலும் பெற்றோர் மறைவுக்கு பிறகு தான் ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருவாயில் தான் தன்னுடைய ஏழு சகோதரிகளை காப்பாற்றி வருவதாக கவிதா கண்ணீர் மல்க கூறினார். கவிதாவின் சோக கதையை கேட்டு நடிகை சமந்தா கவிதாவுக்கு தன் சொந்த செலவில் கார் வாங்கிக் கொடுத்துள்ளார்.






