கொலை செய்து விட்டு போதையில் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் படுத்துறங்கிய இருவர்..!
சென்னையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்து விட்டு போதையில் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் படுத்துறங்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். காசிவிசுவநாதன் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
ஆறு மாதங்களுக்கு முன் காசிவிஸ்வநாதனுக்கும் சுந்தருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியதில் சுந்தர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த சுந்தரர் பரமகுரு உதவியுடன் காசி விஸ்வநாதரை கொள்ள முடிவு செய்து அவரை மது அருந்தலாம் என அழைத்துள்ளார்.
மூவரும் மது அருந்திய நிலையில் காசிவிஸ்வநாதன் மட்டும் அதிகமாக மது கொடுத்து சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் போதை தலைக்கு ஏற அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திலேயே மயங்கிக் கிடந்தனர்.






